திமுக எம்பி ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை இன்று (டிசம்பர் 22) தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தின் கோயம்புத்தூரில் 2004-2007 காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் முன்னாள் கேபினட் அமைச்சர் ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்தின் பெயரில் 45 ஏக்கர் நிலம் ரூ.55 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது.
ஆ.ராசா வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதிக்காக மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட லஞ்சப் பணத்தில் இருந்து இந்த நிலம் வாங்கப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து எம்.பி ஆ.ராசாவின் பினாமி பெயரில் இருந்த 55 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த சொத்துகளை அமலாக்கத்துறை தரப்பில் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து முழுமையான விசாரணை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா