சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராசா இன்று (ஆகஸ்ட் 19) நீதிமன்றத்தில் ஆஜரானார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2015ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
“குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தைவிட 579 சதவீதம் அதாவது, ரூ.5.53 கோடி அளவுக்கு ஆ.ராசா சொத்து குவிப்பில் ஈடுபட்டிருக்கிறார்” என்று குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில்வேலன் முன் இன்று (ஆகஸ்ட் 19) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆ.ராசா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்களுக்கு வழக்குத் தொடர்பான ஆவணங்களை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஆ.ராசா தரப்பில் அடுத்த விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது
இதைதொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அடுத்த விசாராணையின் போது நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய ஆ.ராசா மனு மீது அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
முல்லை பெரியாறு அணை: பீதியை கிளப்பிய சுரேஷ் கோபி… செல்வப்பெருந்தகை கண்டனம்!
ஐ போனுக்காக 3 நாட்கள் பட்டினி … கட்டு கட்டாக பணத்துடன் வந்த பூ விற்கும் பெண்!