ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலையும், இளங்கோவன் வெற்றியையும் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 22) வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் உயிரிழந்ததைத் தொடர்ந்து அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்பட்டது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அத்தேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான பி.விஜயகுமாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விதிகளை மீறி பணப்பட்டுவாடா, பிரச்சாரம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலையும், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றதையும் செல்லாது என உத்தரவிட வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஓபிஎஸ் மாநாடு: அதிமுக கொடி பயன்படுத்த எதிர்ப்பு… போலீசில் புகார்!