tamilnadu assembly

மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம்!

அரசியல்

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2 ஆவது நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

2023ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் போன்ற சொற்களை தவிர்த்தார்.

இது கண்டனத்துக்கு உள்ளான நிலையில், 2ஆம் நாள் கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு தலைமையிலான தமிழக சட்டப்பேரவை கூடியபோது மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு கிழக்கு எம்எல்ஏ திருமகன் ஈவெரா, சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் மஸ்தான், முன்னாள் எம்எல்ஏக்கள் அ.சின்னசாமி, தில்லை காந்தி, துரை கோவிந்தராசன், ந.சோமசுந்தரம் ஆகியோருக்கும், திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ், தமிழறிஞர் அவ்வை நடராசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழறிஞர் க.நெடுஞ்செழியன், பிரபல ஓவியர், எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், கால்பந்து ஜாம்பவான் பீலே ஆகியோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.

கலை.ரா

ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!

சேலை அணிந்து உடற்பயிற்சி: வைரலாகும் வீடியோ!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0