தமிழ்நாடு அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று சில மாதங்களாகவே தொடர்ந்து யூகத்தின் அடிப்படையில் தகவல்கள் வந்த நிலையில்… ‘இன்று ஆகஸ்ட் 22 தமிழ்நாடு அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்’ என கோட்டையில் இருந்து நம்பகமான தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாலை மாற்றி அமைக்கப்படுகிறது. அமைச்சரவையில் இருந்து மூத்த அமைச்சர் உட்பட மூன்று பேர் விடுவிக்கப்பட இருப்பதாகவும், மேலும் புதிதாக மூன்று அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதோடு அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் இந்த வார இறுதியில் அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், இன்று மாலை தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது.
சில நாட்களாகவே அமைச்சர் பதவியை எதிர்பார்த்து சில முக்கிய நிர்வாகிகள் சென்னையிலேயே முகாமிட்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகம் செய்தார் விஜய் : கொடி செல்லும் செய்தி என்ன?