தமிழகத்தை வஞ்சிக்காத மாநிலங்களை மதிக்கின்ற மத்திய அரசு தேவை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் இன்று (மார்ச் 7) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
மகளிருக்காக கொண்டு வரப்பட்ட விடியல் பயண திட்டம், மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதி ஆகியவற்றை குறிப்பிட்டு பேசிய அவர், “இந்த திட்டங்களால் நீங்களும், தமிழ்நாடும் முன்னேற்றம் அடைவதுதான் திராவிட மாடல் அரசுக்கும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் பெருமை!
இப்படி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய பல திட்டங்களை நாம் எவ்வளவோ செய்து கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் ஒன்றிய அரசின் ஒத்துழைப்போ, நிதி உதவியோ இல்லாமல்தான் நாம் செய்து கொண்டு வருகிறோம்.
தமிழ்நாட்டை வஞ்சிக்காத, மாநிலங்களை மதிக்கின்ற ஒன்றிய அரசு அமைந்தால் இன்னும் நிறைய செய்ய முடியும். அதற்கான காலம் கனிந்து கொண்டு இருக்கிறது. அதற்கு உங்கள் எல்லோருடைய ஆதரவும் தேவை… தயாராகிவிட்டீர்களா!
திராவிட மாடல் அரசின் திட்டங்களை உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்! தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற விடியலின் ஒளியை இந்தியா முழுவதும் பரவிட வேண்டும் என்றால், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் அனைவரும் நல்ல முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
IPL 2024: அசுர ‘வளர்ச்சி’யில் ஹர்திக் பாண்டியா… ஆரம்ப ‘சம்பளம்’ எவ்ளோன்னு பாருங்க!
30 லட்சம் அரசு வேலைகள் நிரப்பப்படும் : காங்கிரஸின் 5 வாக்குறுதிகள்!