பழ.நெடுமாறன் மீது வழக்கு? – பாஜகவிடம் விலைபோனதாக புகார்!
சட்டத்தில் இடமிருந்தால் பழ.நெடுமாறன் மீது வழக்குத் தொடருவோம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நேற்று(பிப்ரவரி 13) தெரிவித்தார்.
இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழகத்தின் துணைத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான துரைசாமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இறுதிபோரில் 18-05-2009 பிரபாகரன் வீர மரணமடைந்தார். உடல் அடையாளம் காணப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போதே உயிருடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் இயற்கை போராளி. மறைந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை.
பிரபாகரன் மீது இருந்த இரண்டு வழக்குகளும் முடித்துவைக்கப்பட்டது. அவரது இறப்பு சான்றிதழ் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் உள்ளது.
அவர் உயிருடன் இருக்கிறார் என்று சொல்வதே நல்ல எண்ணத்தில் சொல்லப்படவில்லை.
பாஜக அண்ணாமலை யாழ்பாணம் சென்று வந்து பிரபாகரன் உயிரோடு உள்ளார் என சொல்கிறார்கள். இதில் ஏதோ சதி உள்ளது. பாஜக, மத்திய உளவுப்பிரிவு பிண்னணியில் உள்ளார்கள்.
அவருடைய பெயரை கெடுக்கும் சதி. இதற்கு பிண்னணியில் பாஜக அரசியல் உள்ளது.
பழ.நெடுமாறன் திராவிட கழகத்திற்கு எதிரானவர். இப்போது பாஜக விடம் லாபத்தை எதிர்பார்த்து விலைபோய்விட்டார்.
சட்டத்தில் இடமிருந்தால் பழ.நெடுமாறன் மீது வழக்கு தொடருவோம். விரல் ரேகை அடிப்படையில் பிரபாகரன் இறப்பு சான்றிதழ் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது என்று கூறினார்.
கலை.ரா
தென்காசி வழக்கு: குருத்திகாவை உறவினரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு!
பாஜகவிடம் எடப்பாடி தள்ளியிருக்கும் காரணம்: அழகிரி சொன்ன தகவல்!
ரூ.1000 – ரூ.5000 கொடுக்கிறார்கள்: டெல்லிக்குப் புகாரைத் தட்டிய அண்ணாமலை