எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி: செங்கோட்டையன்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைவதற்கு தேர்தல் ஆணையத்தின் இந்த தீர்ப்பு சாதகமாக வந்துள்ளது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இன்று (ஏப்ரல் 20) அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவதற்கு இந்த தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. ஆகவே அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நல்ல தீர்ப்பை வழங்கியதற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

உதயநிதி, சபரீசன் பற்றி  பிடிஆர் குரலில் பரவும் ஆடியோ புயல்!

அதிமுக பொதுச்செயலாளர்: எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts