தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 19ல் மக்களவைத் தேர்தல்!

அரசியல் இந்தியா

மக்களவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 16) வெளியிட்டுள்ளது.

17 வது மக்களவையின் பதவி காலம் வரும் ஜூன் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 18 வது மக்களவை தேர்வு செய்யப்பட வேண்டும்.

இதை முன்னிட்டு தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளன.

தேர்தல் ஆணையர் ஒவ்வொரு மாநிலமாக சென்று அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தார்.

கடைசியாக ஜம்மு காஷ்மீரில் மார்ச் 13ஆம் தேதி ஆலோசனை மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்ட தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அங்கிருந்து டெல்லி சென்றார்.

தொடர்ந்து மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, ஞானேஷ்வர் குமார் ஆகியோர்  பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது, பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்,   7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதாக அறிவித்தார்.  முதல் கட்ட தேர்தலில் காலியாக உள்ள 233 ஆவது சட்டமன்ற தொகுதியான விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

கடந்த மக்களவைத் தேர்தல் தேதி 2019 மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 18ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Rohit Sharma: கேப்டன் ‘பதவியில்’ இருந்து நீக்கிட… உண்மையான காரணம் இதுதான்!

பொன்முடி அமைச்சராக பதவியேற்பதில் தடை? : ரகுபதி பதில்!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்!

’பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’ நாளை நிறைவு : ஸ்டாலின் பங்கேற்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *