திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ. 89.18 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், ரூ. 908 கோடி அபராதம் விதித்துள்ளதாகவும் அமலாக்கத்துறை இன்று (ஆகஸ்ட் 28) தெரிவித்துள்ளது.
இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சியினர் மீது அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவர் குடும்பத்தினர், ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல் சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது தொடர்பாக சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் ஜெகத்ரட்சகன் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனையும் நடத்தியது.
இந்த நிலையில், அந்நிய செலாவணி மேலாண் சட்டம் (FEMA) பிரிவு 37A இன் அடிப்படையில் ஜெகத்ரட்சகனின் ரூ.89.19 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், ரூ.908 கோடி அபாராதம் விதித்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை சென்றடைய 19 மணி நேரம் ஆகும். அதன்படி இன்று மாலை 5 மணி அளவில் ஸ்டாலின் அமெரிக்காவில் இறங்க உள்ளார்.
இந்த நிலையில் அதற்குள்ளாகவே அமலாக்கத்துறை தற்போது வெளியிட்டுள்ள செய்தி ஒட்டுமொத்த திமுகவினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பள்ளிக்கல்வி துறைக்கான ரூ.573 கோடி நிறுத்தி வைப்பு: மத்திய அரசுக்கு எடப்பாடி கண்டனம்!
வேற லெவல் வசதிகள்: 150 சொகுசு பேருந்துகள்… உதயநிதி தொடங்கி வைத்தார்!