பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 80 சதவிகித மக்கள் ஆதரவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் உலக நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தநிலையில் உலக அரங்கில் பிரதமர் மோடி மற்றும் அவரது ஆட்சியின் மதிப்பீடுகள் எப்படி உள்ளது என்று பியூ ஆராய்ச்சி நிறுவனம் இந்தியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா 24 நாடுகளில் 30,861 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பானது பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் மே 22-ஆம் தேதி வரை நடத்தப்பட்டுள்ளது.
அதில், இந்தியாவில் பிரதமர் மோடியின் தலைமைக்கு 55 சதவிகிதம் பேர் ஆதரவாகவும், 24 சதவிகிதம் பேர் பரவாயில்லை என்றும், 20 சதவிகிதம் பேர் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி
ஆதரவு – 26%, பரவாயில்லை – 36%, எதிர்ப்பு -34 %
மல்லிகார்ஜூன கார்கே
ஆதரவு – 13%, பரவாயில்லை – 33%, எதிர்ப்பு -31 %
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
ஆதரவு – 11%, பரவாயில்லை – 31%, எதிர்ப்பு -30 %
Modi is popular in India, but has more mixed reviews internationally. https://t.co/YH8BkCBelX pic.twitter.com/hXOrl3SFTq
— Pew Research Center (@pewresearch) August 29, 2023
உலக நாடுகளின் மதிப்பீடு!
உலக நாடுகள் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது.
அதன்படி அமெரிக்காவில் 21 சதவிகிதம் பேர் ஆதரவாகவும், 37 சதவிகிதம் பேர் எதிர்ப்பாகவும், 42 சதவிகிதம் பேர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.
ஜப்பான்
ஆதரவு – 45%, எதிர்ப்பு -37 %, கருத்து தெரிவிக்க விரும்பவில்லை – 18%
ஆஸ்திரேலியா
ஆதரவு – 41%, எதிர்ப்பு -42 %, கருத்து தெரிவிக்க விரும்பவில்லை – 17%
தென்னாப்பிரிக்கா
ஆதரவு – 40%, எதிர்ப்பு -44 %, கருத்து தெரிவிக்க விரும்பவில்லை – 16%
இஸ்ரேல்
ஆதரவு – 41%, எதிர்ப்பு -42 %, கருத்து தெரிவிக்க விரும்பவில்லை – 16%
செல்வம்
இளம் வயது பெண்களிடம் அதிகரிக்கும் மாரடைப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரம்: தலைமை நீதிபதியிடம் முறையிட அறிவுறுத்தல்!
தங்களுடைய கருத்துக்கணிப்பு தான் எப்பொழுதும் சரியாக இருக்கும் அதனை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்