10.06 கோடி வாக்காளர்கள்… 57 தொகுதிகளில் தேர்தல் … விறுவிறு வாக்குப்பதிவு!

அரசியல் இந்தியா

மக்களவை தேர்தலின் 7ஆம் கட்ட மற்றும் கடைசி கட்ட தேர்தல் இன்று (ஜூன் 1) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பீகார், சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட 8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஒடிசா மாநில சட்டப் பேரவையின் மீதமுள்ள 42 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி486 மக்களவைத் தொகுதிகளில் 6 கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

சுமார் 10.9 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள், 1.09 லட்சம் வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 10.06 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 5.24 கோடி பேர் ஆண்கள். 4.82 கோடி பேர் பெண்கள் மற்றும் 3574 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.

மொத்தம் 2707 பறக்கும் படைகள், 2799 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 1080 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 560 வீடியோ பார்க்கும் குழுக்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன.

நட்சத்திர வேட்பாளர்கள்…

பிரதமர் மோடி வாரணாசி, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஹிமாச்சல பிரதேசம், ஹமிர்பூர், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் மகள் மிசா பாரதி பிகார் மாநிலம் பாடலிபுத்ரா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினர் அபிஷேக் பானர்ஜி டைமண்ட் ஹார்பர், மண்டி கங்கனா ரணாவத் ஆகிய முக்கிய வேட்பாளர்கள் இன்று களம் காண்கின்றனர்.

மோடி ட்வீட்…

இந்தநிலையில் கன்னியாகுமரியில் உள்ள் பிரதமர் மோடி தியானத்துக்கு மத்தியில் தனது எக்ஸ் பக்கம் மூலம் வெளியிட்ட பதிவில், “இன்று நடைபெறும் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.

இளம் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்கு செலுத்த வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக, நமது ஜனநாயகத்தை மேலும் வலுவாக்குவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

வாக்குப்பதிவு…

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஹிமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் வாக்குச்சாவடியில் தனது மனைவி மல்லிகா நட்டாவுடன் வந்து வாக்களித்தார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

வட மாநிலங்களில் வெயில் அதிகமாக இருப்பதால் காலையிலேயே சென்று பலரும் வாக்களித்து வருகின்றனர்.

-பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாதுகாப்பில்லாத உணர்வை எப்படி கையாள்வது?

டாப் 10 நியூஸ் : 7ஆம் கட்ட தேர்தல் முதல் மோடி தியானம் வரை!

கிச்சன் கீர்த்தனா : இறால் மோமோஸ்!

Singapore Open 2024: அதிரடியாக அரையிறுதிக்கு முன்னேறிய த்ரீஷா – காயத்ரி இணை

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *