இடைத்தேர்தல் வேட்பாளர்கள் எண்ணிக்கை : தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

அரசியல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 6 பேர் வேட்புமனுக்களை திரும்ப பெற்ற நிலையில் 77 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் இன்று (பிப்ரவரி 10) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதியை முற்றுகையிட்டுள்ளதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவதாக வந்த 96 பேரின் வேட்புமனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட்டன. அதில் 83 பேர் மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மேலும் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்றே (பிப்ரவரி 10) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை முதல் மதியம் 3 மணி வரை அமமுக சார்பில் சிவபிரசாத் உட்பட 6 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர்.

இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் இடைத்தேர்தலில் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும், பணப்பட்டுவாடவை தடுக்க 6 குழுக்கள் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஈர இதயத்துடன் பணியாற்றுங்கள் : புதிய மாவட்ட கலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம்!

”சாதனை மேல் சாதனை” அசத்திய ரொனால்டோ: உச்சிமுகர்ந்த அல் நாசர் அணி!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *