விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி கோயம்பேட்டில் உள்ள நினைவிடத்தில் அவரது முழு உருவச் சிலையை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று (ஆகஸ்ட் 25) திறந்து வைத்துள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழ்சினிமாவிற்கு நடிகராக அறிமுகமாகி நூற்றுக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களில் நடித்து அரசியலிலும் தேமுதிக என்ற கட்சி தொடங்கி வெற்றி கால்தடம் பதித்தவர் விஜயகாந்த். அவர்தனது பிறந்த நாளான ஆகஸ்ட் 25 ஆம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்க வலியுறுத்தினார்.
அதன்படி கடந்த கடந்த 2006ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அவரது கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்த் பிறந்தநாளில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதற்கிடையே கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதனையடுத்து நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் அங்கு சென்று விஜயகாந்தின் நினைவிடத்தில் மாலையிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி அவரது நினைவிடத்தில் மார்பளவு சிலையை கண்ணீருடன் திறந்து வைத்தார் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா.
மேலும் கட்சி தலைமை அலுவலத்தில் விஜயகாந்தின் முழு உருவச் சிலையை பிரேமலதா தற்போது திறந்து வைத்துள்ளார்.
தொடர்ந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அப்புசாமி என்பவருக்கு டூவீலரை பிரேமலதா வழங்கினார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளும் தேமுதிக கட்சி சார்பில் அவர் வழங்கி வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!
ஹேமா கமிட்டியால் களேபரம்: நடிகை குற்றச்சாட்டு… டைரக்டர் ரஞ்சித், நடிகர் சித்திக் அவுட்!