உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேற்குவங்கம், உத்தரகண்ட், கேரளம், திரிபுரா மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (செப்டம்பர் 8) வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜெய்க் சி தாமசை விட 37719 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திரிபுரா மாநிலம் போக்ஸாநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் தஃபாஜெல் ஹூசைன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மிஸான் ஹூசைனை விட 30237 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கோஷி தொகுதியில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சுதாகர் சிங் 33782 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் தாரா சிங் செளகான் பின்னடவை சந்தித்துள்ளார். மொத்தம் 34 சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் 23 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது.
திரிபுரா மாநிலம் தன்புர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பிந்து தேப்நாத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கெளஷிக் சந்தாவை விட 18871 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வாதி தாஸ் காங்கிரஸ் வேட்பாளர் பசந்த் குமாரை விட 2405 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் தும்ரி தொகுதியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் பிபி தேவி AJSU கட்சி வேட்பாளர் யஷோதா தேவியை விட 17153 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் துப்குரி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்மல் சந்திரா ராய் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தாப்சா ராயை 4309 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
செல்வம்
புதுப்பள்ளி இடைத்தேர்தல்: உம்மன் சாண்டி மகன் வெற்றி!
முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுத் தாக்கல்!