மதுரை மல்லிக்கு ரூ.7 கோடி!
மதுரை மல்லிகைக்கு ஓர் இயக்கம் உருவாக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (மார்ச் 21) பட்ஜெட்டில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மதுரைக்கும் மல்லிகைக்குமான தொடர்பு இன்று, நேற்று அல்ல சங்க காலம் தொட்டு இருந்து வருகிறது.
எனவே மல்லிகைக்கு புகழ்பெற்ற மதுரையை மையமாக வைத்து ஒரு தொகுப்பு ஏற்படுத்துவது மிகவும் உகந்ததாகும்.
மல்லிகை மதுரையில் மட்டுமின்றி விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 4,300 ஹெக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.
இத்தொகுப்பில் மல்லிகை உற்பத்தியை மேம்படுத்துவதோடு சந்தை வாய்ப்புகளும் மேம்படுத்தப்படும்.
பருவமில்லா காலங்களில் உற்பத்தி உறுதி செய்யப்படும். இத்திட்டம் தொடர் திட்டமாக ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
தொகுப்பிற்கு தேவையான தரமான மல்லிகை செடிகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்து உரிய காலத்தில் வழங்கிட வழிவகை செய்யப்படும்.
மல்லிகை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கவாத்து செய்யவும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகளை மேற்கொள்ளவும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டு ஆண்டு முழுவதும் மல்லிகை பூக்கள் கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வரும் ஆண்டில் இத்திட்டம் ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.
பிரியா
நெல் ஜெயராமன்: மானிய விலையில் விதைகள்…ரூ.50 லட்சம் ஒதுக்கீடு!
விவசாயிகளுக்கு வட்டார அளவில் வாட்ஸ் அப் குழு!