அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது தொடர்பாக அமலாக்கத் துறை இன்று (ஆகஸ்ட் 5) விளக்கம் அளித்துள்ளது.
வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்னும் சில தினங்களில் தீர்ப்பு வழங்க இருக்கிறது.
இதனிடையே கடந்த ஜூன் 13ஆம் தேதி தொடங்கி வெவ்வேறு தேதிகளில் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
நேற்று முன்தினமும் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய கரூர் கோவை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை இன்று (ஆகஸ்ட் 5) ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அதில், ” ஆகஸ்ட் 3ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் 22 லட்சம் ரூபாய் ரொக்கம், கணக்கில் காட்டப்படாத ரூ.16.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் விளக்கம் அளிக்கப்படாத 60 நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
பிரியா
மணிப்பூரை மறக்கடிக்க… மடைமாற்றும் சீமான்: அமீர் அதிரடி
அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி: செல்லூர் ராஜூ