ரூ.800 கோடி ஆபரேஷன் தாமரை தோல்வி: பாஜக மீது பாயும் ஆம் ஆத்மி!

Published On:

| By christopher

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 54 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

டெல்லி, பஞ்சாபை தொடந்து குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி தீவிரம் காட்டி வருகிறது.

2024ஆம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கவும் தயாராகி வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் மதுபான ஊழல் தொடர்பாக, டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா வீடு உள்பட 32 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

அதில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் சிபிஐ விளக்கம் அளித்து இருந்தது.

இதற்கிடையே சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக மனீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து இருந்தது.

எந்த நேரத்திலும் அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், ஆம்ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜக கோடிக்கணக்கில் பேரம் பேசுவதாகவும் தகவல் வெளியானது.

54 aap mlas participate

8 எம்.எல். ஏக்கள் மிஸ்ஸிங்!

இதனையடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் இன்று காலை 11 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி காலை நடைபெற்ற கூட்டத்தில் 54 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆலோசனைக்கு பிறகு எம். எல். ஏ.க்களுடன் சேர்ந்து மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் அரவிந்த் கெஜ்ரிவால்.

முன்னதாக கூட்டம் குறித்து எம்எல்ஏகளுக்கு தகவலை தொலைபேசியில் கூற முயற்சித்தபோது, பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் 8 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை.

எனினும் அவர்கள் தொலைபேசி மூலம் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பேசினார்கள். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்களை குறித்து வைத்து தலா ரூ.20 கோடிக்கு பேரம் பேச முயன்றது பாஜக.

அதன்படி பாஜகவின் 800 கோடி ரூபாய் ஆப்ரேஷன் தாமரை திட்டம் தோல்வியடைந்துவிட்டது என்று ஆம் ஆத்மி மூத்த தலைவர் சௌரப் பரத்வாஜ் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “ஒரு எம்.எல்.ஏ கூட பாஜகவினரின் கோரிக்கையை ஏற்காதது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நாங்கள் இறந்தாலும் நாட்டு மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்” என்றார்.

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி 62 உறுப்பினர்களை கொண்டுள்ளது. பாஜக 8 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆத் ஆத்மி எம்.எல்.ஏக்கள் மாயம்: கெஜ்ரிவால் அதிர்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment