கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் இன்றைய (ஆகஸ்ட் 24) திமுக பொதுக்கூட்டத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரம் பேர் இணைவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிப்பட்டியில் திமுகவின் பொதுக்கூட்டம் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்று வருகிறது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இன்று காலை கோவை ஈச்சனாரி பகுதியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,
அதன்பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு பொள்ளாச்சிக்குச் சென்றார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாட்டில் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைகிறார்கள்.
இதில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி மற்றும் தற்போது மாவட்ட கவுன்சிலராக இருக்கும் அவரது மகள் அபிநயா ஆகிய இருவரும் அவர்களுடன் ஆறுகுட்டி ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தனர்.
இவர்களைத் தவிர, பிஜேபியின் முன்னாள் மாநில மகளிர் அணிச் செயலாளர் மைதிலி, தேமுதிகவின் முன்னாள் எம்.எல்.ஏ. பனப்பட்டி தினகரன் ஆகியோரும், இன்னும் சில இயக்கத்தைச் சார்ந்தவர்களும் திமுகவில் இணைந்தனர்.
அவர்களுக்கு இந்த பொதுக்கூட்டத்தில் முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் தாம் கடந்துவந்த பாதைகள், திமுகவின் சாதனைகள், திட்டங்கள் குறித்து பேசி வருகின்றனர்.
ஜெ.பிரகாஷ்
செந்தில்பாலாஜி என்னிடம் கொடுத்த பட்டியல்: கோவையில் ஸ்டாலின் பேச்சு!