500 people join in AIADMK

எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணையும் 500 பேர்!

அரசியல்

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று (மார்ச் 14) நடைபெறும் 3ம் கட்டப் பேச்சுவார்த்தையில் தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில், கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்கிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று பல்வேறு கட்சியை சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைய உள்ளனர். இதற்கான பணிகளை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஒருங்கிணைத்து வருகிறார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணியில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இன்று 500 பேர் இணைவது குறித்து அக்கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

எடப்பாடி, அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ஸ்டாலின்

”ஒரே நாடு ஒரே தேர்தல்”: குடியரசுத் தலைவரிடம் அறிக்கை சமர்பித்தது ராம்நாத் கோவிந்த் குழு

+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணையும் 500 பேர்!

  1. 500 பேர் இணைவது எல்லாம் ஒரு மாபெரும் மகிழ்ச்சிக்கான நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *