500 கோடி ரூபாயில் 1,000 புதிய பேருந்துகளை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி நாள் கூட்டம் இன்று (அக்டோபர் 19) நடைபெற்று வருகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110ன்கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது உரையாற்றிய ஸ்டாலின், “தமிழ்நாடு போக்குவரத்துக் கழகமானது கோவிட் பெருந்தொற்று காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது.
பேருந்துகளில் பயணம் செய்யும் எண்ணிக்கை 2020-21 காலகட்டத்தில் நாள் ஒன்றுக்கு 70 லட்சமாக குறைந்தது. இதனால் போக்குவரத்து கழக நிதிநிலை பாதிக்கப்பட்டது.
கொரோனாவையும் கட்டுப்படுத்தி, போக்குவரத்து வசதியையும் கழக அரசு சீர்செய்த பிறகு, தற்போது நாளொன்றுக்கு ஒரு கோடியே 70 லட்சம் பேராக பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
அரசின் மிகச் சிறந்த சேவைத் திட்டமான மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதியின் மூலமாக, மகளிர் நாளொன்றுக்கு சராசரியாக 44 லட்சம் பேர் பயணம் செய்துவருகின்றனர்.

இதற்காக, 7,105 சாதாரண நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த கட்டணமில்லா பேருந்துகளை அன்றாடம் வேலைக்குச் செல்லும் பெண்கள், சிறு வியாபாரம் செய்யக்கூடிய தாய்மார்கள் உள்ளிட்டவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், இதுவரை சுமார் 2,000 கோடி ரூபாய் பணம், மகளிருக்கு சேமிப்பாக மாறியுள்ளது. இதனை அரசு, தமது வருமான இழப்பாக கருதவில்லை.
மகளிருக்கான மேம்பாட்டு வளர்ச்சி திட்டமாகவே கருதுகிறது. மேலும், போக்குவரத்து கழகத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 500 கோடியில் 1,000 புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவெடுத்துள்ளது” என்றார்.
ஜெ.பிரகாஷ்
காங்கிரஸ் தேர்தலில் முறைகேடு: சசிதரூர் திடீர் புகார்!
“எடப்பாடி பழனிசாமி மீது கொலை வழக்குப்பதிவு செய்க” – எம்.எல்.ஏக்கள் கோரிக்கை!