அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை நாங்கள் வெளியிடட்டுமா?: ஆர்.எஸ்.பாரதி

அரசியல்

“எடப்பாடி பழனிசாமி, தம்முடன் தொடர்பில் இருக்கும் திமுக எம்.எல்.ஏக்களின் பட்டியலை வெளியிட்டால், நாங்களும் எங்களுடன் தொடர்பு வைத்திருக்கும் அதிமுகவினரின் பட்டியலை வெளியிடுவோம்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் நிகழ்ச்சி ஒன்றில் இன்று (செப்டம்பர் 7) கலந்துகொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் தன்னுடன் பேசி வருகின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று பதிலளித்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“50 அதிமுக எம்.எல்.ஏக்கள், 30 அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 2 எம்.பிக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தம்முடன் தொடர்பில் இருக்கும் திமுக எம்.எல்.ஏக்களின் பட்டியலை வெளியிட்டால்,

நாங்களும் எங்களுடன் தொடர்பு வைத்திருக்கும் அதிமுகவினரின் பட்டியலை வெளியிடுவோம்.

இதை, ஒரு சவாலாகவே நாங்கள் அவருக்குச் சொல்கிறோம். அதிமுகவினர் அனைவருமே திமுகவில் இணைய வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்.

காரணம், திமுகதான் உண்மையான திராவிட இயக்கம். திமுகதான் திராவிடத்தின் தாய்க்கழகம்” என்றார்.

ஜெ.பிரகாஷ்

அதிமுகவை ஸ்டாலினால் அழிக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published.