நெல் ஜெயராமன் மரபு சார் நெல் பாதுகாப்பு ரகங்கள் இயக்கத்தில் 2023-24 நிதியாண்டில் ரூ.50 லட்சம் மதிப்பில் மானிய விலையில் விதைகள் வழங்கப்படும் என்று உழவர் மற்றும் வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசுகையில்,
“தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களான தூய மல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சிலி சம்பா, தங்க சம்பா, கீரை சம்பா ஆகியவற்றை பாதுகாத்து பரவலாக்கிட,
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் 2021-22-ஆம் ஆண்டு 196 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
அதைப்போன்றே இவ்வாண்டும் அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்யப்பட்டு மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.
இதற்காக ரூ.50 லட்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவிலான பாரம்பரிய நெல் விதைகளை இனத் தூய்மையுடன் விதை வங்கியில் பராமரித்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக,
10 விவசாயிகளுக்கு வரும் ஆண்டில் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்