வந்தே பாரத் ரயில்: கல் வீசினால் சிறை தண்டனை!

Published On:

| By Kavi

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட உள்ள நிலையில் வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீசினால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை என ரயில்வே அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இந்தியாவின் அதிவேக ரெயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயண நேரத்தைக் குறைப்பதன் மூலம் பயணிகளுக்கு பயணத்தை எளிதாக்குகிறது.

மத்திய அரசு பல இடங்களில் இந்த வந்தே பாரத் இயக்கத்தை தொடங்கியுள்ளது.

சமீப காலமாக, வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், வந்தே பாரத் ரெயில்கள் மீது கல்லெறிந்தால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரெயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில், தெலங்கானாவில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீசியதாக, ரயில்வே பாதுகாப்பு படையினரால்  39 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ரயில்கள் மீது கல் வீசினால், இந்திய ரயில்வே சட்டம் 153 பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

ராஜ்

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை எதிர்த்து… ஓபிஎஸ்-டிடிவி- சசிகலா முக்கோணக் கூட்டணி சாத்தியமா?

”கட்டிங் பிளேடு வைத்து பல்லைப் பிடுங்கினார்”- சஸ்பெண்ட் ஏஎஸ்பி மீது சரமாரி புகார்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share