தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்று (அக்டோபர் 9) அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
5 மாநிலங்களுக்கான தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வந்தது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நடைபெறும் தேர்தல் என்பதால் அரசியல் கட்சிகளும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.
இந்நிலையில் 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.
தெலங்கானா
வாக்குப் பதிவு: நவம்பர் 30
வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3
வேட்புமனுத் தாக்கல்: நவம்பர் 3
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: நவம்பர் 10
வேட்பு மனு பரிசீலனை: நவம்பர் 13
திரும்ப பெறுவதற்கு கடைசி நாள்: நவம்பர் 15
ராஜஸ்தான்
வாக்குப் பதிவு: நவம்பர் 23
வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3
வேட்புமனுத் தாக்கல்: அக்டோபர் 30
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: நவம்பர் 6
வேட்பு மனு பரிசீலனை: நவம்பர் 7
திரும்ப பெறுவதற்கு கடைசி நாள்: நவம்பர் 9
மத்தியப் பிரதேசம்
வாக்குப் பதிவு: நவம்பர் 17
வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3
வேட்புமனுத் தாக்கல்: அக்டோபர் 21
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: அக்டோபர் 30
வேட்பு மனு பரிசீலனை: அக்டோபர் 31
திரும்ப பெறுவதற்கு கடைசி நாள்: நவம்பர் 2
மிசோரம்
வாக்குப் பதிவு: நவம்பர் 7
வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3
வேட்புமனுத் தாக்கல்: அக்டோபர் 13
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: அக்டோபர் 20
வேட்பு மனு பரிசீலனை: அக்டோபர் 21
திரும்ப பெறுவதற்கு கடைசி நாள்: அக்டோபர் 23
சத்தீஸ்கர்
முதல் கட்ட வாக்குப் பதிவு: நவம்பர் 7
முதல் கட்ட வேட்புமனுத் தாக்கல்: அக்டோபர் 13
முதல் கட்ட வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: அக்டோபர் 20
வேட்பு மனு பரிசீலனை: அக்டோபர் 21
திரும்ப பெறுவதற்கு கடைசி நாள்: அக்டோபர் 23
2ஆம் கட்ட வாக்குப் பதிவு: நவம்பர் 17
2ஆம் கட்ட வேட்புமனுத் தாக்கல்: அக்டோபர் 23
2ஆம் கட்ட வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்: அக்டோபர் 30
வேட்பு மனு பரிசீலனை: அக்டோபர் 31
திரும்ப பெறுவதற்கு கடைசி நாள்: நவம்பர் 2
வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்
காவிரி விவகாரம்: சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்!
இஸ்ரேல் போர்: ஹமாஸுக்கு எதிரான தீர்மானத்தை தடுத்த ரஷ்யா- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்தது என்ன?