போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து – இரு சங்கங்கள் வெளிநடப்பு!

அரசியல்

14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தப்படி போக்குவரத்துறை ஊழியர்களுக்கு 5  சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக சென்னையில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தின.

இதில் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. 66 தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினர்.

7 கட்டங்களாக நடந்த பேச்சு வார்த்தையில் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் பணியிட மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இறுதியில் ஓட்டுநருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ. 2,012 அதிகபட்சமாக ரூ, 7,981 நிர்ணயம் செய்யப்பட்டது.

நடத்துநர்களுக்கு ரூ. 1,965 முதல் ரூ. 6,640 வரையிலும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ. 9,329 வரையிலும், அலுவலகப் பணியாளர்களுக்கு ரூ. 6,640 வரையிலும் தொழில்நுட்ப மேற்பார்வையாளர்களுக்கு ரூ. 8,476 வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு ரூ. 4,692 முதல் ரூ. 7,916 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.

மேலும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவும் அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனை  சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் மட்டும் ஏற்க மறுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர்.  

கலை.ரா

மின் மற்றும் போக்குவரத்து கட்டணம் உயரும்: ஈபிஎஸ்

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *