மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவையில் நேற்று (டிசம்பர் 13) பார்வையாளர் கூடத்தில் இருந்து குதித்த இருவர், தாங்கள் வைத்திருந்த வண்ண புகை குண்டை வீசினர். இந்த சம்பவத்தில் சாகர் ஷர்மா, மனோரஞ்சன், நீலம், அமோல் ஷிண்டே என 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக நடைபெற்ற இந்த சம்பவத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விளக்கமளிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இன்று (டிசம்பர் 14) நாடாளுமன்றம் கூடியதும் மக்களவையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பாஸ் வழங்கியது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் கரூர் எம்.பி ஜோதிமணி உட்பட மொத்தம் 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
“ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், பிரதாபன்கிபி, ஹிபி டன் ஈடன், குரியகோஸ் ஆகியோர் அவையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதால் இந்த கூட்டத் தொடரில் கலந்துகொள்வதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாநிலங்களவை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எம்.பி கணக்கை துவங்கும்: பிரேமலதா உறுதி!
இந்தி தெரியாதா? சென்னை பெண்ணை அவமதித்த சிஐஎஸ்எஃப் வீரர்! நடந்தது என்ன?