48 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தலோடு 13 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடைபெற்றது.
உத்தரப் பிரதேசம் 9, ராஜஸ்தான் 7, மேற்கு வங்கம் 6, அசாம் 5, பஞ்சாப் 4, மற்றும் பீகார் 4, கர்நாடகா 3, கேரளா 2, மத்தியப் பிரதேசம் 2, சிக்கிம் 2, சத்தீஸ்கர் 1, மேகாலயா 1, குஜராத் 1, உத்தராகண்ட் 1 என 48 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
பாஜக
இதில் அசாம் – தோலை, பெகாலி, சமகுரி,
பிகார் – தராரி, ராம்கர்,
சத்தீஸ்கர் – ராய்ப்பூர் சிட்டி தெற்கு
குஜராத் – வாவ்
மத்தியப் பிரதேசம் – புத்னி
ராஜஸ்தான் – ஜுன்ஜுனு, ராம்கர், தியோலி உன்னியரா, கின்ஸ்வர், சலும்பர்,
உத்தரப் பிரதேசம் – குண்டர்கி, காசியாபாத், கயர், புல்பூர், கேதகரி, மஜாவான்,
உத்தரகாண்ட் – கேதர்நாத் என 21 சட்டப்பேரவை தொகுதிகளில் வென்றுள்ளது பாஜக.
காங்கிரஸ்
கர்நாடகா- ஷிகான், சந்தூர், சென்னபட்னா,
கேரளா – பாலக்காடு
மத்தியப் பிரதேசம் – விஜயபூர்
பஞ்சாப் – பர்னாலா
ராஜஸ்தான் – தவுசா என 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ்.
திருணமூல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத்தில் நடைபெற்ற 6 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் வென்றது.
அதுபோன்று மீதமுள்ள தொகுதிகளில் மாநிலக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
முதன்முறையாக தேர்தலில் களம் கண்ட பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி போட்டியிட்ட 4 இடங்களிலும் தோல்வியடைந்தது. .
உத்தரப் பிரதேசத்தில் 9 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில் பாஜக 6 இடங்களிலும் சமாஜ்வாதி கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
அசாம் சித்லி தொகுதியில் தேசிய மக்கள் கட்சியும், போங்கைகாவ் தொகுதியில் அசோம் கானா பரிசத் கட்சியும் வெற்றி பெற்றன.
பீகாரில் இமாகாஞ் தொகுதியில், ஹிந்துஸ்தானி அவார்ம் மோச்சாவும், பெலகாஞ்சி தொகுதியில் ஜனதா தளம் கட்சியும் வெற்றி பெற்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
எப்போதும் ஆட்சியில் பங்கு இல்லை : அமைச்சர் ஐ.பெரியசாமி
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை மையம்!