அதிமுகவை சேர்ந்த 40 MLA-க்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்தனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் அதை விரும்பவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் அரங்கத்தில் எழுத்தாளர் இரா.குமார் திமுக ஆட்சியின் சிறப்பை விளக்கி எழுதிய ‘நடையில் நின்றுயர் நாயகன்’ என்னும் புத்தக வெளியீட்டு விழா நேற்று (நவம்பர் 20) நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அமைச்சர் தங்கம் தென்னரசு புத்தகத்தை வெளியிட, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பெற்று கொண்டார்.
விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ”முதல்வர் ஸ்டாலின் அதிக கொள்கைப்பிடிப்பு கொண்டவர். ஒரு உண்மையை சொல்ல விரும்புகின்றேன். 2016-ல் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைந்த போது அதிமுக கழகம் பல பிரிவுகளாக உடைந்தது. 18 MLA-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். டிடிவி தினகரன் திகார் ஜெயிலுக்கு சென்றார்.
அவர் ஜெயிலுக்கு சென்ற அதே நாளில் நண்பர் ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து 40 அதிமுக MLA-க்கள் திமுகவில் இணைய தயாராக இருக்கின்றனர் என தூது விட்டார். நான் இதை நம்முடைய முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.
அனைத்தையும் கேட்ட அவர், இந்த 40 MLA-க்களை நம்பி நாம் ஆட்சி அமைப்போம் என நினைத்து விட்டீர்களா? அது ஒருபோதும் தேவையில்லை. நாம் மக்களிடம் செல்வோம். மக்கள் நமக்கு அந்த அதிகாரத்தை தந்தால் நாம் ஆட்சியமைப்போமே தவிர நமக்கு அது தேவையில்லை என்று சொன்னவர் இன்றைய முதல்வர்,” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: முக்கிய ஆஸ்திரேலிய வீரர் விலகல்!
இளைஞர்கள் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல: ஐசிஎம்ஆர்