4 மாநில தேர்தல் வெற்றி : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

இதில் மிசோரம் தவிர 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (டிசம்பர் 3) எண்ணப்பட்டு வருகின்றன.

இதில், 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் 56 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 34 தொகுதிகளில் முன்னிலை வகித்து காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது.

230 தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 167 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 62 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

199 தொகுதிகளில் தேர்தலை எதிர்கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 115 தொகுதிகளில் பாஜகவும், காங்கிரஸ் 69 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில், காங்கிரஸ் 64 இடங்களிலும், பிஆர்எஸ் 39 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், ஏஐஎம்ஐஎம் 7 இடங்களிலும், சிபிஐ 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில் 4 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், “தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகள்.

வெற்றி பெற்றவர்கள் அனைத்து தரப்பு மக்களுக்கான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு பாடுபட வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மோடி வென்ற கதை!

புயல் முன்னெச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *