“34 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை”-ஈரோடு தேர்தல் அதிகாரி பேட்டி!
ஈரோடு கிழக்கு தொகுதியில் கண்டறியப்பட்டுள்ள 34 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு, நுண்பார்வையாளர்கள் நியமனம் மற்றும் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் சின்னம் பொருத்தும் பணி இன்று(பிப்ரவரி 18) நடைபெற்றது.
அதனை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி, வாக்கு பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
புகார்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு உடனடியாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
புகார்கள் மேல் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
பதற்றமான 34 வாக்குச்சாவடிகள் உள்ளன அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நுண் பார்வையாளர்கள் வெப் கேமரா மூலம் கண்காணித்தல் மற்றும் கூடுதல் பாதுகாப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவை அதிகரிக்க ஸ்வீப் நடவடிக்கை மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம் என்று கூறினார்.
கலை.ரா
கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு : பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் நிபந்தனை!
“திருடனுக்கு பாடம் புகட்டுவோம்” – உத்தவ் தாக்கரே சூளுரை!