திமுக ஆட்சி அமைந்த பின்னர் 316 துணை மின் நிலையங்கள் அமைக்க அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன் கும்பகோணத்தில் துணை மின் நிலையம் அமைக்க அரசு ஆவணம் செய்யுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,
திமுக ஆட்சி அமைத்த பின்னர் தமிழகத்தின் அதிக மின் தேவையை கருத்தில் கொண்டு 316 துணை மின் நிலையங்கள் அமைக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 துணை மின் நிலையங்களும், கும்பகோணத்தில் 3 துணை மின் நிலையங்களும் அமைய உள்ளது என தெரிவித்தார்.
மேலும் இதில் 274 துணை மின் நிலையங்களுக்கு அரசு நிலங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீதமுள்ள 42 துணை மின் நிலையங்களுக்கு நிலங்களை கையகப்படுத்த பணிகள் நடந்து வருகிறது என்றார்.
இதனைத் தொடர்ந்து அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி, அரக்கோணத்தில் துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் என எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,
அரக்கோணத்தில் 8 இடங்களில் துணை மின் நிலையம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு டெண்டர் விடப்பட உள்ளது என தெரிவித்தார்.
மேலும் மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆத்தூரில் துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் மின் வாரியத்திற்கு என ஒன்பது மண்டலங்கள் இருந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை வருடத்தில் மூன்று புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் சேலத்தில் மின் தேவை இருக்கும் பட்சத்தில் புதிய மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்க முன்னுரிமை வழங்கப்படும். மேலும் ஆத்தூரில் மின் தேவை இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
கலை.ரா
பாஜகவில் இருந்து முக்கிய பிரமுகர் நீக்கம்: அண்ணாமலை அதிரடி!
கொசு ஒழிப்புப் பணிகளுக்காக ட்ரோன்கள்!
இதுவரையிலும் ஆனை தானா..அப்ப சரி