வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா மீதான ஆய்விற்காக 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு இன்று (ஆகஸ்ட் 9) அமைக்கப்பட்டுள்ளது.
வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
மசோதாவில் பல சர்ச்சைக்குரிய திருத்தங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்பட ‛இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா என்பது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ நேற்று அறிவித்தார்.
அதன்படி மசோதா நிறைவேறாமல் நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று அக்குழுவில் இடம்பெறும் எம்பிக்களின் பெயரை மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ இன்று அறிவித்தார்.
அதன்படி நாடாளுமன்ற கூட்டு குழுவில் மக்களவையின் 21 எம்பிக்கள், மாநிலங்களவையின் 10 எம்பிக்கள் என 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.
உறுப்பினர்கள் முழு விவரம்!
அதில் திமுக சார்பில் எம்பி ஆ ராசா (மக்களவை), எம்எம் அப்துல்லா (மாநிலங்களவை) இடம் பிடித்துள்ளனர்.
பாஜக சார்பில் ஜெகதாம்பிகா பால், நிஷிகாந்த் துபே, தேஜஸ்வி சூர்யா, அபராஜித் சாரங்கி, சஞ்சய் ஜெய்ஸ்வால், தலிப் சாய்கியா, அபிஜித் கங்கோபாத்யா, டிகே அருணா ஆகிய எம்.பிக்களும் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் காங்கிரஸ் சார்பில் கவுரவ் கோகோய், இம்ரான் மசூத், முகமது ஜாவித், சமாஜ்வாதி கட்சி சார்பில் மவுலான மொஹிபுல்லா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கல்யாண் பானர்ஜி, தெலுங்கு தேசம் கட்சியின் ஸ்ரீகிருஷ்ணதேவ ராயலு, ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தில்லேஷ்வர் காமைத், சிவசேனா உத்தவ் அணியின் அரவிந்த் சாவந்த், தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணியின் சுரேஷ் கோபிநாத், லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்) அருண் பாரதி ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் என 21 பேர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் மாநிலங்களவையில் இருந்து பிரிஜ் லால்(பாஜக), டாக்டர் மேதா விஷ்ரம் குல்கர்னி(பாஜக), குலாம் அலி(பாஜக), டாக்டர் ராதா மோகன் தாஸ் அகர்வால் (பாஜக), சையத் நசீர் உசேன்(காங்கிரஸ்), முகமது நதீம் உல் ஹக்(திரிணாமுல் காங்கிரஸ்), வி விஜயசாய் ரெட்டி(ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்), எம். முகமது அப்துல்லா(திமுக). சஞ்சய் சிங்(ஆம் ஆத்மி) மற்றும் டாக்டர் தர்மஸ்தலா வீரேந்திர ஹெக்கடே ஆகியோர் என 10 எம்பிக்கள் இடம்பிடித்துள்ளனர்.
மொத்தம் 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அடுத்து நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக கூட்டு குழு தனது அறிக்கையை அளிக்கும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார்.
இந்த பரிந்துரைகளை தொடர்ந்து மீண்டும் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் தர வேண்டும்: சச்சின் கோரிக்கை!
Comments are closed.