முதல்வர் மீதான வழக்கில் ரூ.300 கோடி முடக்கம் : அமலாக்கத்துறை அதிரடி!

Published On:

| By Kavi


கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடர்புடைய முடா வழக்கில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

மைசூர் நகர்ப்புற மேம்பாடு ஆணையம்(முடா) முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு முறைகேடாக நிலத்தை வழங்கியதாகவும் அதற்கு சித்தராமையா உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டும் என்று கர்நாடகாவை சேர்ந்த பிரதீப் குமார் உள்ளிட்டோர் ஆளுநரிடம் விண்ணப்பித்திருந்தனர். 

இதற்கு ஆளுநர் தவார் சந்த் கெலாட் கடந்த ஜூலை 26 ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார். 

இதை எதிர்த்து சித்தராமையா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் முடா முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை சித்தராமையா மீது தனியாக வழக்குப்பதிவு செய்தது. 

இந்த நிலையில் நேற்று இரவு அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில்,  சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக பெங்களூருவில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 140 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் முதல்வர், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

 சித்தராமையா மீதான வழக்கில் அமலாக்கத்துறை எடுத்த இந்த நடவடிக்கைக்கு கர்நாடகா காங்கிரஸார் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வேலைவாய்ப்பு : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

சென்னை சங்கமம் நிகழ்வில் சம்பவம் : மேடையேறி சென்று பாராட்டிய ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share