பிரதமர் மோடி 6 நாள் பயணத்திட்டமாக இன்று (மே 19) காலை வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோ அழைப்பின் பேரில் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதலில் ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி.
அமைதி, நிலைத்தன்மை, உணவு, உரம், ஆற்றல் பாதுகாப்பு, ஆரோக்கியம்,ஆண், பெண் சமத்துவம், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய தலைப்புகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார், பின்னர் ஜப்பான் பிரதமருடன் இருதரப்பு சந்திப்பை நடத்தவுள்ளார்.
இன்று முதல் 21ஆம் தேதி வரையில் ஜப்பானில் இருந்து நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, பப்புவா நியூ கினியாவில் உள்ள போர்ட் மோர்ஸ்பிக்கு 22ஆம் தேதி செல்லும் பிரதமர் மோடி,
அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப்புடன் இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் 3வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.
பிரதமர் மோடி பப்புவா நியூ கினியாவில் கவர்னர் ஜெனரல் சர் பாப் தாடே மற்றும் பிரதமர் ஜேம்ஸ் மராப் ஆகியோரை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்தியப் பிரதமர் ஒருவர் பப்புவா நியூ கினியாவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.
அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் பிரதமர் மோடி, 22-24 வரை அங்கு தங்கி குவாட் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முன்னேற்றங்கள் பற்றி அங்கு பேசவுள்ளார்.
இதுபோன்று 6 நாட்களில் 3 நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி மொத்தம் 40 நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று காலை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பிரியா
கேன்ஸ் விழா: கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்
கோலியின் ருத்ரதாண்டவம் : வாழ்வா சாவா ஆட்டத்தில் பெங்களூரு அபார வெற்றி!
ஏழை மகன் தனி விமானத்தில் செல்வார்,. இருந்த விமானத்தை தனியாருக்கு கொடுத்தாச்சு,. வேறெதில் செல்கிறார்?
மக்கள் வரிப்பணத்தில் செல்லக்கூடிய பயணங்களில் இந்த ஆட்சியின் காலமே இறுதி என நினைத்துக் கொண்டு உலகம் சுற்ற ஆரம்பித்து விட்டார் போல…….