சென்னையில் இவ்வளவு வீடுகள் வாழ தகுதியற்றவையா?

அரசியல்


சென்னையில் மட்டும் 27,538 குடிசைப் பகுதி மாற்று வாரிய வீடுகள் தகுதியற்றவையாக இருப்பதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மறுக்கட்டுமான திட்டத்தின் கீழ், ஆன்டிமானிய தோட்டம், வன்னியபுரம், டாக்டர் தாமஸ் சாலை, கருமாங்குளம், காமராஜ் காலனி, லலிதாபுரம் உள்ளிட்ட பகுதிகளை இன்று (நவம்பர் 28) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக்குப் பின் அவர் கூறுகையில், “குடிசைப் பகுதி மாற்று வாரிய வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு மறுக்கட்டுமான காலங்களில் வெளியே வாடகையில் தங்குவதற்கு கடந்த கால ஆட்சியில் 8000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.

இந்தத் தொகை தற்போது ரூ.24,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொகையை மறுக்கட்டுமானம் செய்யப்பட்டுள்ள குடியிருப்பு தாரர்களுக்கு படிப்படியாக வழங்கி வருகிறோம்.

சென்னையில் மட்டும் 27,538 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்று தகுதியற்ற வீடுகளை இடித்து விட்டு அதே பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி 1200 கோடி ரூபாயில் 7500 வீடுகளும், நடப்பாண்டு 1200 கோடி ரூபாயில் 7500 வீடுகளும் என மொத்தம் 15 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் மறுக்கட்டுமானம் செய்ய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் பத்தாயிரம் குடியிருப்புதாரர்களுக்கு கருணைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 27,538 வீடுகளும் இடிக்கப்பட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.

ஏற்கனவே 200 மற்றும் 300 சதுர அடியில் இருந்த குடியிருப்புகளில் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் சிரமப்படாமல் வாழ வேண்டும் என்பதற்காக 400 சதுர அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தற்போது கட்டுப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் 50 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் கீழ் சென்னையில் 1,20,886 வீடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


பிரியா

யார் இந்த ருதுராஜ் கெய்க்வாட்?

திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல்: யார் யாருக்கு என்ன பொறுப்பு?


.

+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.