வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் அரசு ஊழியர்களுக்கு 270 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு இன்று (அக்டோபர் 21) அரசாணை வெளியிட்டுள்ளது.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுபவர்களுக்கு மகப்பேறு விடுப்பு குறித்த அறிவிப்பை கடந்த ஏப்ரல் 21ம் தேதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் தமிழக சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
இந்நிலையில் , வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு,
ஊதியத்துடன் கூடிய 270 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என்ற அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பச்சிளம் குழந்தை பராமரிப்பு, கர்ப்பிணி பெண்களின் உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த அரசாணை வெளியிடப்படுவதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அரசாணையின்படி, இந்த விடுமுறையை பெற சிகிச்சை அளித்த மருத்துவர் வழங்கிய சான்றிதழ் நிச்சயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் இவ்விடுப்பு முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான பேறு கால விடுப்பானது 12 மாதங்களாக அதாவது ஓராண்டாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
கடுமையான உடல் வலி மற்றும் குணமடைய கால அவகாசம் தேவைப்படும் என்பதால் மகப்பேறு விடுப்பு உயர்த்தப்பட்டது.
ஆனால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும்போது பெண்களுக்கு கடும் உடல் வலிகள் எதுவும் இல்லை என்பதால் 270 நாள்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
13 வருட ஏக்கம் தணிந்தது: வெஸ்ட் இண்டீஸை வீட்டுக்கு அனுப்பிய அயர்லாந்து அணி!
மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!