நாடாளுமன்றத் தேர்தல் : சேலத்தில் அச்சாரம் போட்ட ஸ்டாலின்

அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்று சேலத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கூறினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக சேலம் புறப்பட்டுச் சென்றார். இன்று (ஜூன் 10) மாலை ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கழகச் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளார் கே.என் நேரு உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரக் கூடிய இந்த சூழலில் நான் கலந்துகொள்ள கூடிய முதல் மாவட்ட கழக கூட்டமாக இந்த சேலம் மாவட்ட கழக கூட்டம் அமைந்திருக்கிறது.

சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் இணைக்கப்பட்டு திராவிடர் கழகம் உருவான ஊர் இந்த சேலம். என்னுடைய வாழ்வில் மறக்க முடியாது ஊர் சேலம்.

1996ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 1997ஆம் ஆண்டு இதே சேலத்தில், சேலம் மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றது. அதன்மூலம் எனக்கு மிகப்பெரிய பெருமை கிடைத்தது. அந்த பெருமையை ஏற்படுத்தி தந்தவர் வீரபாண்டியார்.

பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்களை அணிவகுத்த ஊர்வலத்திற்கு தலைமை தாங்கக் கூடிய பெரும் பேரை எனக்கு உருவாக்கித் தந்தார்.

மாலை 5 மணிக்கு தொடங்கிய பேரணி விடிய விடிய நடந்தது. காலை 8 மணி வரை அந்த பேரணி முடியவில்லை.

ஆனால் 8 மணிக்கு மாநாட்டு திடலில் கொடி ஏற்ற வேண்டும் என்பதற்காக கலைஞர் புறப்பட்டு சென்றுவிட்டார்.

இப்படிப்பட்ட பேரணிக்கு தலைமை தாங்கக் கூடிய பொறுப்பு எனக்கு கிடைத்ததை எண்ணி இன்றும் பெருமைப்படுகிறேன்.

1997ஆம் ஆண்டு பேரணிக்கு தலைமை வகித்த நான், 2004 ஆம் ஆண்டு மாநாட்டில் 50அடி உயரத்தில் கழக கொடியை ஏற்றி வைக்கக் கூடிய வாய்ப்பை பெற்றேன். இதுவும் வீரபாண்டியார் மூலம் கிடைத்தது. இந்த நினைவுகளுடன் இப்போது உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

கலைஞரின் நூற்றாண்டு இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட உள்ளோம். இதற்காக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்” என்று குறிப்பிட்ட ஸ்டாலின் அந்த தீர்மானங்களை பட்டியலிட்டார்.

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், “வர இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வதற்கு அச்சாரமிடக் கூடிய கூட்டம் தான் இந்த செயல்வீரர்கள் கூட்டம். அதுவும் சேலத்தில் மாபெரும் வெற்றி பெற வேண்டும்.

அதற்காகத்தான் நேருவை சேலத்துக்கு அனுப்பியிருக்கிறேன். அவரை பொறுத்தவரை திருச்சியில் சட்டப்பேரவைத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் 100/100 மார்க் எடுத்தவர்.

நாடும் நமதே நாற்பதும் நமதே என முப்பெரும் விழாவில் சொன்னேன். அதனை உரக்கச் சொல்வதற்காகத் தான் சேலம் வந்திருக்கிறேன்” என்றார்.

பிரியா

“டாஸ்மாக் வருவாய் அரசுக்கு அத்தியாவசிய தேவை” – ஐ.பெரியசாமி

பாமக தலைமையில் கூட்டணி : அன்புமணி

2026 election we won 40 seat
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *