பாமக தலைமையில் கூட்டணி : அன்புமணி
பாமக தலைமையில் கூட்டணி அமைத்து 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட மருத்துவக்குடி கிராமத்தில் இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் ஒரு கூட்டணி அமைத்து 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சியை அமைப்போம். அதற்கான வியூகங்களை 2024 மக்களவைத் தேர்தல் முதலே தொடங்குவோம்” என்று கூறினார்.
முன்னதாக அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் பல்வேறு அரசியல் கட்சிகள் தற்போது முதலே ஆயத்தமாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் : பின்னணி என்ன?
திருப்பதியில் ஐஸ்வர்யா லக்ஷ்மி சாமி தரிசனம்!