2024 நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் ஜூன் 1-ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்த தேர்தலில் 64.2 கோடி பேர் வாக்களித்துள்ளனர். முதல் கட்ட தேர்தலில் 64.14%, இரண்டாம் கட்ட தேர்தல் 66.71%, மூன்றாம் கட்ட தேர்தல் 65.68%, நான்காம் கட்ட தேர்தல் 69.16%, ஐந்தாம் கட்ட தேர்தல் 62.20%, ஆறாம் கட்ட தேர்தல் 63.37%, ஏழாம் கட்ட தேர்தல் 61.63% வாக்குகள் பதிவாகியுள்ளது.
சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதால், 542 தொகுதிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள minnambalam.com மற்றும் மின்னம்பலம் யூடியூப் சேனலுடன் இணைந்திருங்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: முக இறுக்கத்துக்கு அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவரா நீங்கள்?
டாப் 10 நியூஸ் : வாக்கு எண்ணிக்கை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல் வரை!