2024 தேர்தல் : இரவில் மோடி நடத்திய ஆலோசனை!

அரசியல் இந்தியா

பாஜக மூத்த தலைவர்கள் நேற்று இரவு சுமார் 5 மணி நேரம் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

2024ஆம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் எப்படியாவது பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. மறுபக்கம் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெற ஆயத்தமாகி வருகிறது.

எனினும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்பட்ட கர்நாடக தேர்தலில் தோல்வி அடைந்தது. அடுத்ததாக இந்த ஆண்டு சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த மாநிலங்களின் தேர்தல் வெற்றி 2024 தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் .
இந்தச்சூழலில் நேற்று இரவு டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா, பாஜக பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரம் ஆலோசனை நீடித்திருக்கிறது.

அப்போது கட்சியின் உள் கட்டமைப்பு மற்றும் அரசியல் பிரச்சினைகள் ஆகியவை குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையின் போது பாஜகவுக்குள் மறுசீரமைப்பு செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஜே.பி.நட்டாவும் ஜூலை 6 முதல் 8 வரை ஒவ்வொரு பிராந்தியத்தின் உயர்மட்டத் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தென் மாநிலங்களின் பாஜக தலைவர்கள் மற்றும் பிற முக்கிய தலைவர்களின் கூட்டம் ஹைதராபாத்தில் ஜூலை 8 ஆம் தேதி நடைபெறும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் முதல் பாஜக அமைச்சர்கள் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை பொது விளக்க கூட்டங்களில் கலந்துகொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

மாமன்னன் படம் விமர்சனங்களுக்கு பதில் சொல்லும்” – மாரி செல்வராஜ்

ஆஸ்கர் குழுவில் மணிரத்னம்

+1
0
+1
3
+1
1
+1
2
+1
2
+1
0
+1
0

1 thought on “2024 தேர்தல் : இரவில் மோடி நடத்திய ஆலோசனை!

  1. இந்த நியூசோ சுட்டுரையோ எழுதின ஆளுக்கு கொஞ்சம் கூட வெமாசூசு இருக்காதா? கர்நாடக தேர்தல் மட்டும் நாடாளுமன்றத்திற்கான முன்னோட்ட தேர்தலாம்..ஓயால..அடுத்த வர போகிற 5ம் இவுங்க பின்னோட்ட தேர்தலாம்…
    நல்ல ஊடகத்தை நாசமாக்க குப்பைகளை கூட சேர்க்க வேணாம்…எங்க மேயுதோ எங்க திங்கதோ எங்க திங்குதோ என ஆராய்ச்சி பன்னாமல் ஒன்றுக்கு மூன்று தடவை படித்து விட்டு அப்லோட் பன்னுங்க கூசிரியரே..வணக்கம்..வாழ்த்துகள்..நன்றிகள்..த்தூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *