அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 25) மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ராகுல் காந்தி மோடி பெயர் குறித்துப் பேசியதாக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 23ஆம் தேதி சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அடுத்த நாளே ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து ஏப்ரல் 3 ஆம் தேதி ராகுல் காந்தி சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வரும் வரை சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரி 2 மனுக்களைத் தாக்கல் செய்தார்.
கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 20 ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் , அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“உறவினர்களுக்கு டெண்டர் ஒதுக்கிய எடப்பாடி”: மா.சுப்பிரமணியன்
விஏஒ-விற்கு நேர்ந்த துயரம்: ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு!