வேளாண்மை தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
முக்கிய அறிவிப்புகள்:
ரூ.15 கோடி மதிப்பீட்டில் 60,0000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படும்.
ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.11 கோடியில் வேளாண் கருவிகள் வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு வேளாண்மை குறித்த தகவல்களை பகிர்வதற்காக ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மை தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்காக ரூ.2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிட ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
செல்வம்
“குறுவை சாகுபடியில் சாதனை”: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது!