காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் இன்னும் 2 வாரங்களில் ஜம்மு காஷ்மீரில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார்.
பாஜக உடன் இணையவில்லை
காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரசின் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்த 40 ஆண்டுகால உறவை நேற்று முறித்துக் கொண்டார்.
ராகுல்காந்தியின் கையில் கட்சி சென்றதே காங்கிரசின் தொடர் தோல்விகளுக்கு காரணம் என்று அவர் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.
குலாம் நபி ஆசாத்தின் பேச்சு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை பிரதிபலிப்பதாகவும், அவர் பின்னணியில் பாரதிய ஜனதா தலைவர்கள் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் குற்றம் சாட்டினர்.
குலாம் நபி பாஜக-வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
தனிக்கட்சி
ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு தனிக்கட்சி தொடங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
தனது கட்சியின் முதல் பிரிவு ஜம்மு காஷ்மீரில் தொடங்கப்படும் என்றும் காங்கிரசுக்கு திரும்பும் வாய்ப்பே இல்லை என்றும் குலாம் நபி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் காங்கிரசில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகிய நிலையில் அவரது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மற்ற காங்கிரஸ் நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகியிருக்கின்றனர். அவர்கள் குலாம் நபியுடன் சேர்ந்து புதிய கட்சியை தொடங்குவதற்கான பணிகளில் இறங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரசில் இருந்து விலகியவர்கள் ஆதரவு
அதன்படி குலாம் நபி ஆசாத்தின் நெருங்கிய நம்பிக்கையாளரான காங்கிரசில் இருந்து விலகியவருமான ஜி.எம். சரூரி, பல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நேற்று(ஆகஸ்ட் 26) டெல்லியில் ஆசாத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
குலாம் நபி ஆசாத் சொந்தக் கட்சியைத் தொடங்கத் தயாராகிவிட்டார். புதிய கட்சியைத் தொடங்குவதற்கு முன், குலாம் நபி நலம் விரும்பிகளுடன் ஆலோசனை நடத்த செப்டம்பர் 4 ஆம் தேதி ஜம்மு வருகிறார் எனறு தெரிவித்தார்.
கலை.ரா
குலாம் நபி ஆசாத்தின் அடுத்த நகர்வு… அமித்ஷா நடத்திய ஆலோசனை!