141 MPs Suspended in parliament
மக்களவையில் இன்று (டிசம்பர் 19) மேலும் 49 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவையில் கடந்த 13ஆம் தேதி அலுவல்கள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென தடுப்புகளை தாண்டி அவைக்குள் குதித்து வண்ண புகைக் குண்டுகளை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மக்களவையில் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி மக்களவையிலிருந்து திமுக எம்.பி.கனிமொழி உட்பட 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று மக்களவையில் 33 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 45 எம்.பி.க்கள் என ஒரே நாளில் 78 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இன்று மக்களவை உறுப்பினர்கள் 49 பேர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசிக எம்.பி. திருமாவளவன், காங்கிரஸ் எம்.பி.க்கள் கார்த்தி சிதம்பரம், சசி தரூர், தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, தேசிய மாநாட்டுக் கட்சி பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி எம்.பி.டிம்ப்ள் யாதவ் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Sonia Gandhi ji joins the protest with opposition MPs They are protesting against the suspension of 92 MPs pic.twitter.com/o1QLIjsz7r #Parliament #INDIAAlliance
— Phoenix Jayaseelan-INC🇮🇳 (@PhoenixJaiSeela) December 19, 2023
இதுவரை மக்களவையிலிருந்து 95 பேரும், மாநிலங்களவையிலிருந்து 46 பேரும் என 141 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வாசலில் அமர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இவ்வளவு எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு, மக்களவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. மகுவா மொய்த்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், “141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அடுத்து அதானி பங்குதாரர்களின் வருடாந்திர கூட்டம் மக்களவை சேம்பரில் நடைபெறும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
IPL2024: பிரீத்தி ஜிந்தா, தோனி, ரிஷப் பண்ட்… ஐபிஎல் ஏலத்துக்காக துபாயில் குவிந்த நட்சத்திரங்கள்!
மழை வெள்ளம்: நெல்லையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!
141 MPs Suspended in parliament