Jagadeep Dhankar calls on opposition parties
|

14 எம்பிக்கள் சஸ்பெண்ட் : எதிர்க்கட்சிகளுக்கு ஜெகதீப் தன்கர் அழைப்பு!

மக்களவையில் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து இன்று (டிசம்பர் 15) எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திவரும் எதிர்க்கட்சி தலைவர்களை தனது அறையில் வந்து சந்திக்குமாறு மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவையின் கேலரியில் இருந்து கடந்த 13ஆம் தேதி  குதித்து வண்ண புகை குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மக்களவையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து எதிர்க்கட்சி எம்பிகள் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில்  14 எம்பிக்கள் சஸ்பெண்டை கண்டித்தும், அத்துமீறி வண்ண புகை குண்டு வீசியவர்களுக்கு அனுமதி அளித்த பாஜக எம்பியை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தியும்,

எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று மக்களவையின் மையப்பகுதியில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

Image

எனினும் மக்களவை வாயிலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி க்கள் தொடர்ந்து 14 எம்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டது மற்றும் நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சி தலைவர்களை தனது அறைக்கு வந்து சந்திக்குமாறு மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சச்சினைத் தொடர்ந்து தோனிக்கு பெருமை செய்த பிசிசிஐ : ரசிகர்கள் ஹேப்பி!

‘லியோ’ல அது தப்பாகிருச்சு… இனிமே அதை செய்ய மாட்டேன்: லோகேஷ் கனகராஜ்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts