125 அடி அம்பேத்கர் சிலை: சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்!

அரசியல் இந்தியா

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று 125 அடி உயர அம்பேத்கரின் சிலையை திறந்து வைத்தார்.

ஐதராபாத் ஹூசைன் சாகர் ஏரியின் கரையில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்.டி.ஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள இந்த 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ் இன்று (ஏப்ரல் 14) திறந்து வைத்தார். இந்த சிலை இந்தியாவிலேயே உயரமான அம்பேத்கர் சிலை என்ற பெருமைக்குரியதாக திகழ்க்கிறது.

இந்நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தெலங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

முதலையிடமிருந்து குட்டியை காப்பாற்றிய தாய் யானை!

வலிமையான கொல்கத்தா அணியை வீழ்த்துமா ஹைதராபாத் ?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *