மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்க : கமல்

Published On:

| By Kavi

12 மணி நேர வேலை சட்டத்திருத்த மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். 

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவை, அரசியல் கட்சிகள், தொழிற்சங்கத்தினரின் கடும் எதிர்ப்பால் தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், இந்த சட்ட மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

இதுகுறித்து இன்று கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட முன்வடிவின் மீதான மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது எனும் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன்.

யார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுத் தரப்பின் நியாயமான கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்துச் செயல்படுவது ஓர் ஆரோக்கியமான அரசின் அடையாளம்.

12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

பிரியா

12 மணி நேர வேலை’: மே 12 போராட்டம் நிறுத்திவைப்பு!

மீண்டும் 45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment