‘12 மணி நேர வேலை’: மே 12 போராட்டம் நிறுத்திவைப்பு!

Published On:

| By Kavi

12 நேர வேலை சட்ட மசோதாவை நிறுத்திவைப்பதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்த நிலையில், தொழிற்சங்கத்தினரும் தற்காலிகமாகப் போராட்டத்தை நிறுத்திவைத்துள்ளனர்.

கடந்த 21-4-2023 அன்று, 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் முக்கிய தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. திமுக, அதிமுக கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு இந்த சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தின.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து நேற்று மாலை 12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்தச்சூழலில் மே 12ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

பிரியா

மீண்டும் 45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

சொதப்பிய ஹைதராபாத்… சாதனை படைத்த டெல்லி!