மகளிருக்கு 29000 ரூபாய்: அண்ணாமலை கோரிக்கை!

Published On:

| By Jegadeesh

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன் திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், ‘குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ’தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் செப்டம்பர் 15-ஆம் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்’

என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச் 20) பட்ஜெட்டில் அறிவித்தார்.

இந்த நிலையில், தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மடைமாற்றாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை இன்று (மார்ச் 20 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு,

‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி.

வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்: பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

தமிழக பட்ஜெட்: “வெளிச்சம் தராத மின்மினிப் பூச்சி”: எடப்பாடி விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.